மொஹொமட் ஆஸிக் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மெததும்பறை பிரதேச செயலக பிரிவில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும், பாத்ததும்பறை பிரதேச செயலக பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேரும், உடதும்பறை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஐவரும், கலகெதர பிரதேச செயலகப் பிரிவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து பிரதேச செயலகங்களும் அந்தந்த மக்களுக்காக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
9 hours ago
9 hours ago
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
13 May 2026
13 May 2026