Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 நவம்பர் 30 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகரில் டி. எஸ். சேனநாயக்க வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (30) மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைகலப்பில் ஈடுபட்ட மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் காரணமாக நகரில் பெரும் பதற்றமான சூழல் உருவானதால், பொதுமக்கள் பாதுகாப்புக்காக வெறுங்கையுடன் ஓடினர்.
உணவகத்தினுள் மோதலில் ஈடுபட்டவர்கள் குண்டாந்தடிகள், போத்தல்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டதோடு, அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சத்துடன் பாதுகாப்புக்காக ஓடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.
மோதலின் பின்னர், கண்டி பொலிஸ் தலைமையகத்திலிருந்து அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.
மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பலரையும், காயமடைந்தவர்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
42 minute ago
51 minute ago