2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கண்டியில் பாவனைக்குதவாத உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- எசல பெரஹெரவைப் பார்ப்பதற்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் மக்களுக்கு, வழங்குவதற்காக, வைக்கப்பட்டிருந்த 3000 கிலோகிராம் பாவனைக்குதவாத உணவுப் பொருள்கள் அழிக்கபட்டதாக கண்டி நகர சுகதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, இந்த உணவுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன்போது பாவனைக்குதவாக கிழங்கு, பெரிய வெங்காயம், மீன்,இறைச்சி உள்ளிட்ட பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

சில உணவகங்களின் உரிமையாளர்கள், மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மரக்கறிகளை கொண்டு வந்து கொத்து ரொட்டி போன்ற உணவு தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .