2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கத்திக்குத்தில் ஒருவர் பலி: இருவர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கந்தகெடிய, கருமெடிய பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், பலாங்கொடை, வட்டவலையைச் சேர்ந்த பமுனுஆராய்ச்சிலாகே சுமேத பிரேமச்சந்திர (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 17 வயது இளைஞனையும் அவனது தந்தையையும் கந்தகெட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான நபர், கருமெடிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழிற்சாலைக்கான நிர்மாணப்பணிகளை மேற்பார்வையிட்டு வந்துள்ளார். இதன்போது, அவருக்கும் ​தொழிலாளி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே, இச்சம்பவத்துக்குக் காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்து, சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டுக்குச் சென்றுள்ளதுடன் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியப் பின்னரும்கூட முறுகல்நிலை நீடித்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபர், தான் கையில் வைத்திருந்த கத்தியால் குறித்த இளைஞனின் வயிற்றில் குத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றப் போதிலும், வைத்தியர்கள் இளைஞன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் , வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .