2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கதிரையில் அமர்ந்திருந்தவாறே ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் ஞாயிறு சந்தைப் பகுதியில் மர்மமான முறையில், கதிரையில் அமர்ந்திருந்தவாறே உயிரிழந்த வியாபாரி ஒருவரின் சடலம் ​இன்று (2) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன் ஞாயிறு சந்தையில் பல வருடங்களாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வியாபார நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் இரவு அவர், அந்த வர்த்தக நிலையத்திலே​யே தங்கி விடுவதாகவும் இன்று (2) காலை அவரது வர்த்தக நிலையம் திறக்கப்படாமையை அவதானித்த அயல் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள், சம்பந்தப்பட்டவரின் வர்த்தக நிலையத்தை திறந்து பார்த்த போதே, அவர் கதிரையில் அமர்ந்திருந்தவாறே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X