Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
அரசாங்கத்திடமுள்ள, மலையக மக்களின் அபிவிருத்தி நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாத, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் திகாம்பரம் பெற்றுக்கொடுத்த நிதியையே அடிக்கல் நாட்டுவதற்கு பயன்படுத்தி வருகிறார் என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டுக்காக, ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்ய, முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசாங்கம், 200 மில்லியன் ரூபாய் நிதியை, நன்கொடையாக வழங்கியது.
“அதற்கிணங்க, நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டதோடு, ஆரம்ப நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சரவையின் முக்கியஸ்த்தர் ஒருவரும் கலந்துகொள்வற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தநிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் நோர்வே அரசின் நன்கொடையிலேயே உருவாக்கப்பட்டது என்றும் காலப்போக்கில் நிலையத்தை காடாக்கி அங்கு பணிபுரிந்த உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமல், அவர்களது வாழ்க்கையையும் கேள்விக்குரியாக்கிவிட்டது என்றும் அவர் கூறினார்.
பின்னர் பழனி திகாம்பரம் அமைச்சரானதும், நிலையத்தின் அபிவிருத்திக்காகவும் ஊழியர்களின் ஊதியத்தை பெற்றுக்கொடுக்கவும் திரைசேரியில் நிதியை பெற்று, உத்தியோகத்தர்களின் நிலுவையைச் செலுத்தியமை, அங்கு பணிபுரிந்தவர்ளுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையிலேயே? இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியில் அடிக்கல் நாட்டுவதற்கு ஆறுமுகன் தொண்டமான் துடிக்கிறார் என்றும் திகாம்பரம் அமர்ந்த அமைச்சின் நாற்காலியில் அமர மறுத்த தொண்டமான், இன்று இந்த நிதியை மாத்திரம் பயன்படுத்துவது, வேடிக்கையாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago