2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கத்தியால் குத்திய மாணவ காதல்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே அந்த மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X