2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து தடை

R.Maheshwary   / 2022 ஜனவரி 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து இன்று (05) காலை முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கோனப்பிட்டிய- கல்கந்தை எனும் இடத்தில் இன்று அதிகாலை  1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, இந்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று,வீதியில்  சரிந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக இராகலை மற்றும் மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X