Editorial / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா- உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில், நேற்று (14) இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமர்ஹில் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை பகுதியை நோக்கிப் பயணித்த, லொறியும், நுவரெலியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றுமே, நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தின் போது, தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் மூவரும், லொறியில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த, கந்தப்பளை பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி எம்.பிரசன்ன, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago