ஆ.ரமேஸ் / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை நகர அபிவிருத்திக்கு, சில விஷமிகள் முட்டுக்கட்டையாகச் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் யோகராஜ், நேரடியாக மோதுவதற்கு தைரியமில்லாத கோழைகளே, இவ்வாறு முதுகில் குத்துகின்றனர் என்றும் கூறினார்.
கந்தப்பளை நகரில், இத்தனை காலமும் வீதியோரம் நடத்தப்பட்டு வந்த வாராந்தப் பொதுச் சந்தை நடவடிக்கையை, 35 வருடங்களுக்கு மேல் மூடிக்கிடக்கும் கட்டடமொன்றுக்கு மாற்றி, அக்கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று (31) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கந்தப்பளை, அதையண்டி பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை குழப்பியடிக்கவும் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், பிரதேச மதகுருமார்களின் ஏகோபத்த ஆதரவுடன், அவையனைத்தையும் தான் முறியடித்ததாக அவர் கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச சபைகளில், கடந்த ஒன்றரை வருடத்தில், 40 மில்லியன் ரூபாய்க்கான அபிவிருத்திகளை, நுவரெலியா பிரதேச சபையே முன்னெடுத்தது என்றும் வேறு எந்தவொரு பிரதேச சபையும் அவ்வாறான அபிவிருத்தியை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், கந்தப்பளை நகரில், வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தின் போது, முதன்முறையாக, வாகனங்களை நிறுத்தும் பணி, பெருந்தோட்டங்களின் தேயிலைத் தொழிற்சாலை இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பொறியியல் நிறுவனமாக இயங்கி வந்த, 35 வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்து வந்தக் கட்டடம், கந்தப்பளை பொதுச் சந்தைக்காக கையளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago