2026 மே 09, சனிக்கிழமை

கந்தப்பளையில் உரத்தட்டுப்பாடு

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 31 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தப்பளைப்  பிரதேசத்தில்  கடந்த ஒருவாரமாக உரவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் இப்பிரதேசத்தில் மரக்கறி விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  கந்தப்பளை நகரில் இரசாயன உரவகைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும்  விற்பனை செய்து வரும் ஒரு சில விற்பனை நிலையங்கள் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  நிர்ணய விலையான 1050/= ரூபாவுக்கு விற்பனைச்  செய்யப்பட வேண்டிய  50 கிலோ கிராம்  நிறை யுடைய ஒரு மூட்டை உரத்தின் விலை  1150/= ரூபாய் தொடக்கம் 1250/= ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் உரத் தட்டுப்பாட்டையடுத்து  சில வர்த்தக நிலைய  உரிமையாளர்கள் உரத்தைப்  பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்..

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .