Kogilavani / 2021 மே 17 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில், முதலாவது கொரோனா மரணம், இன்று (17) காலை பதிவாகியுள்ளது.
கந்தப்பளை சென்ஜோன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 58 வயது நபர், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார் என்று, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் லஹிரு கருணாரத்ன தெரிவித்தார்.
மேற்படி நபர் கொழும்புக்குச் சென்றுவந்த நிலையில், கடந்த ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றும் இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்றும் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்ஜோன்ஸ் தோட்டத்தில், தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago