2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கம்பளை நகரில் 200 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ   

கம்பளை நகரில் இன்று (30) சுமார் 200க்கும் மேற்பட்டோர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

கம்பளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு, வியாபாரம் நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கம்பளை நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் அங்கு தொழில் புரிந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பிஸ்கட் நிறுவனத்தின் முகவருடன் தொடர்பைப் பேணியவர்களே பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X