Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம்.ரம்ஸீன்
கம்பளை, உடுநுவர வெலிகல்ல பகுதியில், பாதையோரத்தில் காணப்பட்ட பையிலிருந்து எட்டு கைக்குண்டுகளை, தவுலுகல பொலிஸார், செவ்வாய்க்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
வெலிகல்ல – தளவதுரை வீதி வழியாக சென்ற பால் சேகரிக்கும் லொறியின் சாரதி, வீதியில் போத்தல்களுடன் கைப்பைக் கிடப்பதைக் கண்டறிந்துள்ளதுடன், அதனை அப்புறப்படுத்த முற்பட்டபோதே, கைக்குண்டுகள் இருப்பதை அறிந்து, தவுலகல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளதுடன், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை வரவழைத்து, குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர்.
போத்தல்கள் லொறியின் டயர்களில் பட்டால் டயர்கள் சேதமடையும் என்ற காரணத்துக்காகவே, லொறி சாரதி போத்தல்களை அப்புறப்படுத்த முயன்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
3 hours ago