R.Maheshwary / 2022 ஜூன் 20 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
இலங்கை சீனி நிறுவனத்துக்குரிய பெல்வத்த சீனி தொழிற்சாலைக்கு, விநியோகிக்கும் ஒரு தொன் கரும்புக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 7,500 ரூபாய் 8,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த சீனி நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் சீனி 306 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுவதுடன், 1 லீற்றர் ஸ்பிரிட் 1,000 ரூபாய் விநியோகிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த நிறுவனம் தற்போது அதிக இலாபத்துடன் தொழிற்படுகின்றமை தொடர்பில், பெல்வத்த கரும்பு விவசாய சங்கத்தின் செயலாளர் ஆர்.எம். விக்ரமசிங்கவிடம் வினவியபோது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கரும்பு விவசாயிகள் எரிபொருள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக பாரிய நிதியை செலவிடுகின்றனர்.
இந்த நிலையிலேயே பெல்வத்த சீனி தொழிற்சாலையில் சீனி மற்றம் ஸ்பிரிட் உற்பத்தி 300 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் நிறுவனத்தின் இலாபமும் அதிகரித்துள்ளது என்றார்.
12 minute ago
14 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
41 minute ago
46 minute ago