2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கற்றல் நடவடிக்கை ஆரம்பிப்பு

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கேகாலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வத்துர ஸ்ரீலங்கா வித்தியால மாணவரின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்படி பாடசாலையின் அருகிலுள்ள சமூர்த்தி வங்கி மற்றும் விவசாயத்துறை காரியாலயத்தில் நேற்று(16) பாடசாலை அரம்பித்து வைக்கப்பட்டது.

அதில் முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 150 மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாணவருக்கு  தேவையான   கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணஙகள் என்பவற்றை(16) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் வழங்கி வைத்தார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பாடசாலைகளை துரிதகதியில் அபிவிருத்தி செய்து மீண்டும் ஆரம்பிக்க மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்பாடசாலைக்கு தேவையான அனைத்து பௌதிக மற்றும் மனித வளங்களை துரிதமாக பெற்றுக்கொடுக்க சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள பெலிகுல்வான கனிஷ்ட வித்தியாலயம், வத்துர ஸ்ரீலங்கா வித்தியாலயம், தெஹியோவிட்ட தமிழ வித்தியாலயம், களுபஹன தமிழ் வித்தியாலயம், அட்டலுகம கனிஷ்ட வித்தியாலயம்,  எலங்கப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயம், எலங்கபிட்டிய ஸ்ரீபுற கனிஷ்ட வித்தியாலயம், லங்காபெரிய தமிழ் வித்தியாலயம், பெட்டிகல தமிழ் வித்தியாலம் ஆகிய 9 பாடசாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .