R.Maheshwary / 2022 ஜனவரி 13 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் உள்ளிட்ட எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (12) கறுப்பு பட்டியணிந்து மாதாந்த சபை அமர்வுகளில் கலந்துகொண்டனர்.
பிரதேச சபை தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில், நேற்று (12) அமர்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது, அண்மையில் ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் இருவரால் தாக்குதலுக்கு இலக்கானமை மற்றும் மஸ்கெலியா பிரதே சபைக்குட்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக பிரதேச சபை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்தே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் பிரதேச சபையின் உப தவிசாளருமான பிரதீபனும் எதிர்கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் சபைக்கு கறுப்பு பட்டியணிந்து வருகைத் தந்தனர்.
36 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
2 hours ago