Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்
மஸ்கெலியா பிரதேச சபையின் நேற்றைய (12) அமர்வின்போது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர், கறுப்புப் பட்டி அணிந்து சபைக்குப் பிரவேசித்தமையால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
பிரதேச சபையின் தவிசாளரை நியமிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அநீதி இழைக்கபட்டதெனத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐ.தே.கவின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்குள் பிரவேசித்தனர்.
மஸ்கெலியா பிரதேச சபையின் அமர்வு, தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில், நேற்றுக் காலை 10 மணி ஆரம்பமானதுக்
இதன்போது, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐ.தே.கவின் ஓர் உறுப்பினரைத் தவிர ஏனையோர், கறுப்புப் பட்டி அணிந்து சபைக்குப் பிரவேசித்தனர் .
இதன் போது கறுப்புப் பட்டி அணிந்து வருகை தந்திருக்காதவரும் தவிசாளர் தெரிவின்போது வாக்களிக்கத் தவறியவருமான ஐ.தே.க உறுப்பினர் ஏ.ரஞ்சனி விளக்கமளிக்க முற்படுகையில், தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்களான சுரேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர், இதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதனால் சபையில் குழப்பம் வலுவடைந்தது. எனினும், பின்னர் தவிசாளரின் தலையீட்டினால், சபை நடவடிக்கைகள் வழமைக்குக் கொண்டுவரப்பட்டன.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025