2026 மே 09, சனிக்கிழமை

கலேவல – மொரகொல்ல விபத்தில் 11 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

 

கலேவல – மொரகொல்ல பிரதான வீதி, ஹொம்பாவ பகுதியில் இன்று (28) நடைபெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வானொன்றும் கோழிப் பண்ணைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியதில் அவ்விரு வாகனங்களில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 3 ஆண்களும் 8 பெண்களும் காயமடைந்துள்ளனர் இவர்கள், கலேவல, தம்புள்ளை ஆகிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .