2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கலைப்பிரிவின் கற்றல் செயல்பாடுகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் கற்றல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, பீடாதிபதியால்  மாணவர் சங்கத்திடம்  கோரிய வாக்குறுதிக் கடிதம் இதுவரை கலைப்பீட பீடாதிபதிக்கு கிடைக்கப்பெறவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊடக தொடர்பாடல் பிரிவின் பதில் உபவேந்தரும் பேராசிரியருமான டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்

இதனால் குறித்த பீடத்தின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதை பிற்போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கற்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று  (16) அவரிடம் தொடர்புகொண்டு வினவியபோதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலைப் பீடத்தின் சட்டப் பிரிவு மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக, பீடத்தின் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளும் 03 வாரங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X