2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கல் விழுந்ததில் சிறுவன் மரணம்

Janu   / 2024 ஒக்டோபர் 07 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மலையிலிருந்து விழுந்த பாறையினால் தலையில் பலத்த காயம் அடைந்த 11 வயது மாணவன், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக நூரி பொலிஸார் தெரிவித்தனர்.கித்துல்கல, பல்லேபாக பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய பஹான் சங்கல்பா என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் குன்று உள்ளதுடன், சம்பவத்தின் போது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மலை உச்சியிலிருந்து பாறை ஒன்று புரண்டுவந்து மாணவனின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார் என ​பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று மாணவியின் தந்தை மலையடிவாரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X