R.Maheshwary / 2021 நவம்பர் 29 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கண்டி- பன்வில கலகிரிய தோட்ட மக்களுக்கு புதிய வாழ்வு எனும் திட்டத்தின் கீழ், 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிராஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தலைமையில் நடைபெற்றது.
பன்வில -கலகிரிய தோட்ட மக்களுக்கு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 2 கோடி 60 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பணிப்பாளர், தோட்ட அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago