Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூன் 13 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மது பானங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து சட்ட விரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்வோர், சாமிமலை பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து உள்ளனர் என அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இவ்வாறு கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இல்லாமல் ஒழித்தனர்.
தற்போது மீண்டும் மீண்டும் கசிப்பு உற்பத்தி சாமிமலை கல்தோனி பகுதியில் இயங்கி வருகிறது அதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து பொலிஸ் மா அதிபர் முதல் இப் பகுதியில் உள்ள அனைத்து காவல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அரியத் தந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாமிமலை கல்தோணி பகுதியில் இயங்கி வரும் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுற்றி வளைப்பு மேற்கொண்டு அங்கு இயங்கி வரும் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை இல்லாதொழிப்பதுடன் அவ்வாறு உற்பத்தி செய்யும் நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025