R.Maheshwary / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
ஹங்குராகெத்த கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்றதாக கூறப்படும் பாரியளவிலான நிதி மோசடி தொடர்பில், கணக்காய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 97 இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதென உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கடமையிலிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை செலுத்தும் போது, வேறொரு நபரின் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நிதி வைப்பிலிப்பட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடியுடன் தொடர்புடைய கல்வி வலய அதிகாரி, 2016ஆம் ஆண்டு, வலப்பனை பிரதேச சபைக்கு மாற்றலாகி சென்றுள்ளதுடன், அரச சேவை ஆணைக்குழு ஊடாக வாராந்த இரண்டு நாள்களுக்கு ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தின் சம்பளம் தொடர்பான பிரிவுக்கு கடமைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், அவரது மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கொன்றை உருவாக்கி அதில் 1.7 மில்லியன் ரூபாய் வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாசவிடம் வினவியபோது, இந்த மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .