2026 மே 06, புதன்கிழமை

கல்விச் சேவையாளர்களிடமிருந்து கடனை அறவிடாதிருக்க நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

மத்திய மாகாண சனச கூட்டறவு சங்கத்தில், கடன் பெற்றுள்ள கல்விச் சேவையாளர்ளிடமிருந்து, தவணைக் கட்டணங்கள், ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அறிவிக்கும் வரை அறவிடப்படமாட்டாது என்று, அச்சங்கத்தின் தலைவர் வை.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்,  ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர்,  'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களிடம் கடன் அறவிடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

'எனினும் கூட்டுறவு சங்கங்களில், கடன் அறவிடுவதுத்  தொடர்பாக அரசாங்கம் அதில் குறிப்பிடவில்லை. எனினும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி சேவையில் உள்ளவர்கள்,  தங்களது சேவைக்காலத்தின் போது வீடு கட்டுவதற்கோ, காணி வாங்குவதற்கோ கடன்களை பெற்றுதான் தங்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். 

'இந்நிலையில் பலருடைய சம்பளம் கடனுக்காகவே செலுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் மேலதிக வகுப்புக்களையும் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுமே தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈடுசெய்து வந்தனர். 

'தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அவசர கால சூழ்நிலை காரணமாக வேறு எந்த வருமானமும் பெற முடியாது உள்ளதால், கடந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபை, இக்கடனுக்கான தவணைக் கட்டணங்களை, நிலைமை சீரடையும் வரை அறவிடுவதில்லையென முடிவுசெய்து, அதற்கான கடிதங்களையும் வலயங்களிலுள்ள கணக்காளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏப்ரல் மாதம், அங்கத்துவ தொகை மாத்திரமே அறவிடப்படும் என்றும் ஏனைய எந்தத் தொகையும் அறவிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு சில தொழிற்சங்கங்கள், தங்களது அங்கத்துவர்களை அதிகரித்துக்கொள்வதற்காக, சமூக ஊடகங்கள் மூலமாக தங்களுடைய தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சனச கூட்டுறவு சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரப்பிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .