2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

களுப்பஹன மக்களுக்கு 100 புதிய வீடுகள்

Kogilavani   / 2016 ஜூன் 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ், புளத்கொஹூப்பிட்டிய, களுப்பஹன தோட்டத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி 100 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

மேற்படி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல வீடுகளும் சேதமாகின. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இப்பகுதிக்கு கடந்த 20ஆம் திகதி விஜயம் மேற்கொண்ட மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளை  நிர்மாணித்துத் தருவதாக உறுதியளித்தார்.

இதற்கமைய 7 பேர்ச் காணிகளில் 550 சதுரஅடி அளவுள்ள 100 தனி வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில்,  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி   
அமைச்சர் பழனி திகாம்பரம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .