R.Maheshwary / 2022 ஜனவரி 04 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத். எச்.எம்.ஹேவா
ஹொரனை பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய மஸ்கெலியா- கவரவில தோட்டத்தின் உர களஞ்சியசாலையிலிருந்து 11 இலட்சம் பெறுமதியான யூரியா உரம் 197 மூட்டைகள் காணாமல் போனமைத் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி குறித்த களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உரமூட்டைகள் தொடர்பான இறுதி கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்ட போதே, உர மூட்டைகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்தால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸின் ஆலோசனைக்கமைய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .