Freelancer / 2023 மார்ச் 29 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், ரஞ்சித் ராஜபக்ஷ, டி.சந்ரு
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது - 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
'கள்' ஏற்றிக்கொண்டு குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த 'கள்' லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், 'கள்' லொறி அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டது. அதன் சாரதியை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

49 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
15 Jan 2026