Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்து விராஜ் அபயசிறிய
இறைச்சிக்காக அறுக்கப்படுகின்ற கால்நடைகளின் கழிவுகளை, மாத்தளை- பலகடுவ பகுதியில் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென உக்குவல்ல பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.
கால்நடைகளின் கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார்.
கால்நடைகளின் கழிவுகளை நகரசபை ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் குழி தோண்டி புதைக்கின்றனர். ஆனால், மீண்டும் மீண்டும் அவ்விடத்திலே கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவ்விடயம் தொடருமானால் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் கூறினார்.
23 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
2 hours ago