2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பூவரசன, எம்.செல்வராஜா   

பசறை, மடுல்சீமை பிட்டமாறுவ ஆகிய பகுதிகளுக்கு, நிரந்தரமான பஸ்சேவையை ஏற்படுத்தித் தருமாறுக் கோரி, பொதுமக்களும் மாணவர்களும், மடுல்சீமை நகரில், நேற்றுக் காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பிட்டமாறுவயிலிருந்து மடுல்சிமை வரையுள்ள பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சேவை இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டியே, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

இப்பகுதியில் சீரான பஸ் சேவை இடம்பெறாததன் காரணமாக, பாடசாலை மாணவர்கள், போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.   

இவ்விடயம் தொடர்பில், இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை டிப்போ அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறிய போதிலும், இப்பிரச்சினைக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்று, கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.   இவ்வார்ப்பாட்டத்தில், பட்டாவத்த தமிழ் வித்தியாலயம், மடுல்சீமை தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .