2026 மே 09, சனிக்கிழமை

கவனிப்பாரற்ற நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலை

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை, தற்போத கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலை அசுத்தமாக இருப்பதன் காரணத்தால், நோயாளர்கள் மாத்திரமன்றி, நோயாளர்களை அழைத்து வருவவோர், நோயாளர்களை பார்வையிடவருவோர் என, அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையிலுள்ள மின் தூக்கி பழுதடைந்துள்ள நிலையில், பல மாதங்களாகியும் அது இன்னும் திருத்தப்படவில்லை என்றும் அதைத் திருத்துவதற்காக, வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சில உதிரிப்பாகங்கள், மழையில் நனைந்து துருப்பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையிலுள்ள பற்றாக்குறை குறித்து ஆராய்வதற்காக, பல அரசியல்வாதிகள் வந்துபோனபோதும், இதுவரையில் எந்தவொ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழல் புற்கள் நிறைந்து காணப்படுவதால், பாம்பு, பூச்சி போன்ற உயிரினங்கள் வைத்தியசாலைக்குள் வரும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும் என்று, மக்களும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .