Editorial / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் இடை நிறுத்தம் செய்ய பட்ட நாளில் இருந்து வேதனத்துடன் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து கடந்த 5 ம் திகதி முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி காரியாலயத்தில் ஹட்டன் வலய காவல் துறை அதிகாரி முன் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் தோட்ட முகாமையாளர் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் முகாமையாளர் முறையாக பதில் சொல்ல முடியாத நிலையில் மீண்டும் அப் போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறியது.
செவ்வாய்க்கிழமை (10)ஆம் திகதி காலை முதல் உண்ணாவிரதம் இருந்த தொழிலாளி ஒருவர் மயக்கம் முற்ற நிலையில் 1990 நோயாளர் காவு வண்டியில் புதன்கிழமை (11) காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago