R.Maheshwary / 2021 நவம்பர் 17 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம -காசல்ரீ நீர்தேக்கத்தின் அருகாமையில் ஆண் ஒருவரினது, ஒரு ஜோடி பாதணியும் கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளன என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொருள்கள் இன்று (17) காலை 08.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நிவ்வெளிகம பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு சிறுமிகள் முகம் கழுவதற்காக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் இன்று காலை சென்றுள்ளனர்.
இதன் போது, குறித்த பொருள்களைக் கண்ட சிறுமிகள், கொழும்பிலுள்ள தனது தந்தைக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர், இதுதொடர்பில் தொலைபேசி ஊடாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார், காசல்ரீ நீர்தேக்கத்தில் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பாதணி மற்றும் தொலைபேசியானது, நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 20 வயதான சரத்குமார் என்பவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026