2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காசோலை கையளிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 01 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- செனன் தோட்டம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் நிர்மாணத்துக்காக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தால் ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலை, கோவில் நிர்வாகக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான  சோ.ஸ்ரீதரன் இந்தக் காசோலையை, உரியத்தரப்பினரிடம் ஒப்படைத்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் செனன் வட்டார பொறுப்பாளர் விஜேந்திரன், இணைப்பாளர் சந்திரன், தோட்டத் தலைவர் பாஸ்கர், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் புதுவருட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X