2026 மே 14, வியாழக்கிழமை

காட்டில் மறைந்திருந்த துப்பாக்கிதாரி கைது

Editorial   / 2020 ஜனவரி 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபிலை- கராடுகல பிர​தேசத்தில் பெண்ணொருவரைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் நில்கல காட்டில் மறைந்திருந்த நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கராடுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான 58 வயதுடைய நபரென்றும் இவர் கைதுசெய்யப்பட்ட போது, இவரிடமிருந்து துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகராறே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமென்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள​தென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .