2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காட்டு விலங்குகள் வேட்டை அதிகரிப்பு; கவனம் செலுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

“மொரகஹகந்த வனப்பகுதிக்கு வரும் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின், இறைச்சியை அம்பன பிரதேசத்தில் கொண்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் விசமிகள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் இரகசியமான முறையில், காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முயல், மான் மற்றும் காட்டுப் பன்றி போன்ற காட்டு விலங்குகளே, அதிகளவில் வேட்டையாடப்படுகின்றனவெனவும் இவ்வாறு வேட்டையாடப்படும் விலங்குகளை இறைச்சியாக்கி, அம்பன பிரதேசத்தில் கொண்டு விற்பனை செய்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .