2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காட்டுத் தீயால் 10 ஏக்கர் நாசம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை, தம்பவின்ன அம்பட்டிகந்த காட்டுப் பகுதியில், நேற்று (06)  மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சுமார் 10 ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுப் பகுதியை அண்மித்து அமைந்துள்ள வீடுகளுக்குத் தீப்பரவாமல் இருப்பதற்காக, பல்வேறு முயற்சிளை மேற்கொண்டதாகவும் பெரும் பிரயத்தனங்களின் மத்தியிலேயே, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, காடுகளில் தீப்பரவும் சம்பங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X