Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா- சீதாஎலிய வனப்பகுதியின், எல்லையில் உள்ள காட்டின் 2,3656 ஹெக்டயர் நிலப்பரப்பை, வீட்டுத் திட்டத்துக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இயற்கை சுற்றுச்சூழல் தர்ம மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர், கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்தப் பிரதேசம் சுற்றுச்சூழல் பாதுகாப்புமிக்க பிரதேசம் என்பதுடன், வன விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், இவ்வாறு நிலங்கள் துண்டாக்கப்பட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிலத்தின் ஒருபகுதி, நில அளவையாளர் திணைக்களத்துக்கு சொந்தமானதென்றும், இந்தப் பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதானது, மண்சரிவு எச்சரிக்கையை ஏற்படுத்துமெனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே சித்திரைப் புதுவருட காலத்தில், அரசாங்கம் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமெனவும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025