Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ், செ.தி. பெருமாள்
மஸ்கெலியா நகரில், நேற்று முன்தினம் (19) இரவு காணாமல் போன 30 வயது இளைஞன், இன்று (21) காலை, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா தபால் நிலையத்துக்கு அருகில் வசிக்கும் பெத்தும் மதுசங்க லியனகே என்ற இளைஞரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனைக் காணவில்லை என, இளைஞனின் பெற்றோர், பொலிஸில் முறைபாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையிலேயே, இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்துக்கு அருகில், இளைஞனின் பாதணி மீட்கப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்கத்தில் தேடும் பணிகள், நேற்று முன்தினம் (20) இரவு முன்னெடுக்கப்பட்டது. கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டபோதே, இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
19ஆம் திகதி இரவு, குறித்த இளைஞனுக்கு, அலைபேசி அழைப்பொன்று வந்தது என்றும் அதன்பின்னர் வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை என்றும், பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
மீட்கப்பட்ட இளைஞனின் சடலம், பிரதேச பரிசோதனைகளுக்காக, நாவலபிட்டி வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இது கொலையா அல்லது தற்கொலையா போன்றக் கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago