Janu / 2025 ஜூன் 15 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்து வரும், மொனராகலை, பிபில, மலபடு ஹெல பகுதியைச் சேர்ந்த, ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பி.எம். லஹிரு சமன் குமார (28 வயது) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது மனைவியுடன் தனமல்வில பகுதியில் உள்ள, மனைவிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், பதுளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் வராததால், தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அதற்கமைய அவரது சொந்த ஊரான பிபில, யல்குபுர, பிரதேசத்தில், மூடப்பட்டிருக்கும் பாழடைந்த வீடொன்றை பொலிஸார் மற்றும் அயலவர்கள் இணைந்து சோதனையிட்ட போது காணாமல் போனவரின் உடல் கூரையில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago