Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
'காணி உரிமை என்பது எமக்குரிய சொத்து. எனவே, கிடைக்கப்பெற்றுள்ள காணி உரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன 200 வருடங்களாக கனவாகவே இருந்து வருகிறது. தேசிய வருமானத்திற்கு பங்களிப்பு செய்தும் இந்த நிலைமை காணப்பட்டது. எமது மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலையகத்தில் வாழும் சகலருக்கும் வீட்டுரிமை, காணி உரிமை என்பன பெற்றுக் கொடுக்கப்படும்.
காலை முதல் மாலை வரை வேலை செய்தாலும் சொற்பளவு சம்பளமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. அதை வைத்து அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டத்தில் வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும்." - என்றார்.
எஸ்.கணேசன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago