2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘காணியை பெற்றுத்தருவேன்’

Kogilavani   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“ஹட்டன்- செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கான விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்காக, இரண்டு ஏக்கர் காணியை பெற்றுத்தருவேன்” என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

செனன் பாடசாலை கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,

“பாடசாலைகளின் அபிவிருத்தித் தொடர்பில் நாங்கள் கண்காணித்துக்கொண்டுதான் உள்ளோம். இந்தப் பாடசாலைக்கென, விளையாட்டு மைதானம் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். அதற்காக இரண்டு ஏக்கர் காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே, மாகாணத்தில் தமிழ்க் கல்வியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த அமைச்சுக்கூடாக பாடசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X