2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

காதலுக்கு எதிர்ப்பு; தாய் தீவைத்து எரிப்பு:13 வயது சிறுமி கைது

Editorial   / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவியாவார். 

தீ வைப்புத் தாக்குதலில் படுகாயமடைந்த தாய், பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் ஆவார். தாய்க்கு தீ வைத்த இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X