2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காப்புறுதி நிலைய ஊழியர்கள் ஐவருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நாவலப்பிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையத்தின் ஊழியர்கள் ஐவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, ஐம்பது பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பஸ்பாகே கோரளை பொது சுகாதர பரிசோதகர் காரியாலய வைத்திய அதிகாரி டபிள்;யூ,எஸ்.கே.விக்ரமகே தெரிவித்தார் 

காப்புறுதி நிறுவன ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று (10) வெளியானபோதே ஐவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாவலபிட்டி, கெட்டபுலா, ரம்புக்பிட்டிய, வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காப்புறுதி நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றியவர்கள் உட்பட 50 பேர் வரை  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் தெரிவித்தார்.

மேலும் மேற்படித் தொற்றாளர்களில் இருவர், திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளதுடன் மேலும் ஒருவர் நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியிலுள்ள மருந்தம் ஒன்றுக்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேற்படி ஐவருடன் தொடர்பைப் பேணியவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாக, வைத்தியர் விக்ரகமமே மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X