Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
ஹொப்டன் பழைய ஸ்டோர் ஏ, பீ டிவிசன், இல 1 காமன் கோவிலின் வருடாந்த காமன் விழா, நாளை மறுதினம் (26) இரவு 9.26 மணிக்கு, காமன் திடலில் கம்பம் ஊன்றப்படுவதுடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 28ஆம் வெள்ளிக்கிழமை இரவு சுபவேளையில், சிவன் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
மார்ச் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சுபவேளையில், ரதி,மதன் திருமணம் நடைபெற்று, மகேஸ்வர பூஜை நடைபெறவுள்ளது.
7ஆம் திகதி சனிக்கிழமை, வள்ளுவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடகம், கலைநிகழ்வுகள் என்பன அரங்கேற்றப்பட்டு, 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு, கம்பத்துக்கு தீ மூட்டும் வைபவம் இடம்பெறும்.
10ஆம் திகதி இரவு, சிவன் கொடியிறக்கும் நிகழ்வும் உயிர் எழுப்பும் வைபவமும் இடம்பெற்று, விழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago