2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காய்ச்சல் காரணமாக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.ஹேவா

ஹட்டனிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுவரும் மாணவிகள் இருவர், காய்ச்சல் காரணமாக, டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார்.

மாணவிகள் இருவரும் கடந்த 12,15 ஆம் திகதிகளில், கொழும்பிலிருந்து மேற்படி பாடசாலைக்கு அருகிலுள்ள பெண்கள் விடுதிக்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி விடுதியிலுள்ள 20 மாணவிகளையும் அருட்சகோதரிகள் இருவரையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X