Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன
நோர்வூட் சென்ஜோன் டிலரி தோட்டத்தில், செவ்வாய்க்கிழமை (14) மாலை வீசிய கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக, பல வீடுகளின் கூரைகள், காற்றில் அள்ளுண்டுச் சென்றதால், 27 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேரந்த 26 பேர், தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதுடன் வீடுகளில் இருந்த பொருள்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை கிராம அதிகாரிகள் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago