R.Maheshwary / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
காலாவதியான மருந்துகளை நோயாளர் ஒருவருக்கு விற்பனை செய்த, பதுளை நகரிலுள்ள மருந்தக உரிமையாளர் ஒருவரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், தனது குற்றத்தை, பதுளை நீதவான் நீதிமன்றில் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
பதுளை நீதவான் டபிள்யூ.என்.டி.டி சில்வா, நேற்று (26) இந்த அபராதத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
தான் குறித்த மருந்தகத்திலிருந்து வாங்கி வந்த மருந்தை, பயன்படுத்துவதற்கு முதல் பரிசோதித்த போது, அது காலாவதியாகியிருந்தது என பெண் ஒருவர், பதுளை சுகாதார சேவை அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மருந்தக உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களான ஜே.ஏ.சமரிஜீவ மற்றும் எஸ். சுதர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .