Editorial / 2024 மே 19 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கால்நடை வைத்தியராக நடித்து நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து வந்த நபரொருவர் திம்புள்ள- பத்தனை பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தில் உள்ள கால்நடை பண்ணை ஒன்றில் நோயுற்ற பசுவிற்கு சிகிச்சை அளிப்பதாக தலவாக்கலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்தியர் ஏ.ஏ.சுரேஷ் குமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திம்புள்ள- பத்தனை ஸ்தலத்துக்குச் சென்று, போலி வைத்தியரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பலவற்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய 58 வயதுடைய போலி கால்நடை வைத்தியர் ஹட்டன்- கொட்டகலை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் ஹட்டன் மற்றும் நுவரெலியா பொலிஸ் பிரிவில் கால்நடை பண்ணைகளை நடத்தி வருபவர்களிடம் சென்று நோயுற்ற கால்நடைகளுக்கு பணம் பெற்று சிகிச்சை அளித்துள்ளார் தலவாக்கலை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரச கால்நடை வைத்தியர் ஏ.ஏ.சுரேஷ் குமார், தெரிவித்தார். அவர், சிகிச்சையளித்த கால்நடைகளில் பல உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது சந்தேகநபர் தப்பி ஓடியதாகவும், பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்த போதும் சந்தேக நபர் தப்பிச் செல்லும் போது கீழே விழுந்ததால் காயங்களுக்கு உள்ளானதால் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்தார்.
சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ரஞ்சித் ராஜபக்ஷ
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago