2026 மே 09, சனிக்கிழமை

dd

’கால்நடைகளை கொண்டுசெல்வதற்கு மத்திய மாகாணத்துக்கு கடும் கட்டுப்பாடு’

மொஹொமட் ஆஸிக்   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்துக்குள் கால்நடைகளைக் கொண்டுச் செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என, மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.கே.பீ ராஜநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு இடையில், கால்வாய் நோய் பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,

மத்திய மாகாணங்களுக்குள் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதைப் போன்றே, மத்திய மாகாணத்திலிருந்து மற்றைய மாகாணங்களுக்குக் கால்நடைகளைக் கொண்டுச் செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முடிந்தவரையில், கால்நடைகளை வெளிப்பிரதேசங்களுக்கு கொண்டுசெல்வத்தைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் முடியாதபட்சத்தில், கால்நடைகளுக்கான ஊசி ஏற்றப்பட்டு, 14 நாள்கள் பராமரித்த பின்னரே, அவற்றைக்கொண்டுச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கால்நடைகள் இறைச்சிக்காக அறுக்கப்படும் போதும், அதன் இறைச்சி வகைகள் வேறு பிரதேசங்களுக்குக் கொண்டுச் செல்லப்படும் போதும், அதை சரியான முறையில் பரீட்சிக்கும் பொறுப்பு, மிருக வைத்தியர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .